Cell-94434-96302 contact@tnta.org.in

Notice

மிக அவசரம்

க.எண். 1620/தநாதேச/2024                           நாள்: 10/02/2024

பெறுதல்

தலைவர் / செயலாளர் அவர்கள்

அனைத்து மாவட்ட தேக்வாண்டோ இணைப்பு சங்கம்

 

ஐயா

பொருள்: தமிழ்நாடு தேக்வாண்டோ சங்கம் – முதலாவது கேலோ இந்தியா பெண்களுக்கான தேக்வாண்டோ லீக் போட்டி 2023 – 24 – தமிழக அணிக்கான தேர்வு போட்டி நடத்துவது தொடர்பாக – தொடர்பாக

பார்வை: TFI Email Dt: 09/02/2024

 

   முதலாவது கேலோ இந்தியா பெண்களுக்கான தேக்வாண்டோ லீக் போட்டி 2023-24, Phase – 3, ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கம், புதுச்சேரி மாநிலத்தில் 27/02/2024 முதல் 01/03/2024 வரை நடைபெற உள்ளது.

 தமிழக அணிக்கான தேர்வு போட்டி வருகிற 17/2/2024 அன்று இந்திய விளையாட்டு ஆணையம் சேலம் பிரிவு மகாத்மா காந்தி ஸ்டேடியம் சேலம்  மாவட்டத்தில் காலை 9 மணி அளவில்         Under 14years (CADET) – கீழ்க்கண்ட எடை பிரிவு மாணவிகளுக்கான  தேர்வு போட்டி நடைபெற உள்ளது.

1.Under -47kg, 2.Under -51kg, 3.Under -55kg, 4.Under -59kg, 5.Over – 59kg.

சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தின் சார்பாக ஒரு இடை பிரிவிற்கு இரண்டு மாணவிகளை தேர்வு செய்து 17/02/2024 அன்று நடைபெற உள்ள மாநில தேர்வு போட்டிக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்படுகிறது. போட்டிக்கு வரும்போது போட்டிக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் தாங்களே கொண்டு வர வேண்டும்.

       

மேலும் திருவாரூரில் நடைபெற்ற 34வது மாநில போட்டிகளில் ஜூனியர் மற்றும் சீனியர் எடை பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற மாணவிகள் தமிழக அணி சார்பாக புதுச்சேரியில் நடைபெற உள்ள முதலாவது கேலோ இந்தியா பெண்களுக்கான தேக்வாண்டோ லீக் போட்டிக்கு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆகையால் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற மாணவிகளின் விண்ணப்ப படிவத்தினை உரிய இணைப்புகளுடன் 17/02/2024 தேதிக்குள் மாநில பொதுச் செயலாளர் அவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. காலதாமத்துடன் வரும் நுழைவு படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.

 

நன்றி,

தங்கள் உண்மையுள்ள,

தமிழ்நாடு தேக்வாண்டோ சங்கத்திற்காக

 

(பொ. செல்வமணி)

பொதுச்செயலாளர்