சுற்றறிக்கை
க.எண். 1523 / தநாதேச / 2025 நாள்: 25.07.2025
பெறுதல்
தலைவர் / செயலாளர் அவர்கள்
அனைத்து மாவட்ட தேக்வாண்டோ இணைப்பு சங்கம்
ஐயா
பொருள்: தமிழ்நாடு தேக்வாண்டோ சங்கம் – மாநில நடுவர் பயிற்சி முகாம் (State Kyorugi Referee / Refresher course) விபரங்களை தெரிவித்தால் – தொடர்பாக
பார்வை: செயலாளர் புதுக்கோட்டை கடித நாள்: 22.07.2025
*****************
பார்வையில் கண்ட கடிதத்திற்கு இணங்க தமிழ்நாடு தேக்வாண்டோ சங்கத்தின் சார்பாக மாநில நடுவர் பயிற்சி முகாம் (State Kyorugi Referee / Refresher course) தேக்வாண்டோ விளையாட்டு சங்கம் புதுக்கோட்டை மூலமாக சுதர்சன் கல்லூரி பெருமாநாடு, புதுக்கோட்டை மாவட்டத்தில் 14/08/2025 முதல் 16/08/2025 வரை நடைபெற உள்ளது.
மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளப் பயிற்சியாளர்களிடமும் உரிய அறிவிப்பினை செய்து உரிய விண்ணப்பத்துடன் பிறப்புச் சான்றிதழ், Blue Belt & above சான்றிதழ், தேசிய நடுவர் சான்றிதழ் அல்லது மாநில நடுவர் சான்றிதழ் நகலை இணைத்து மாநில நடுவர் பயிற்சி முகாம் நடைபெறும் அன்று உரிய கட்டணத்துடன் செலுத்துமாறு தெரிவித்துக் கொள்கிறோம்.
14/08/2025 தேதி அன்று விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அதற்குரிய கட்டணங்கள் பெறப்படும். 15/08/2025 தேதி அன்று காலை முதல் நடுவர் பயிற்சி முகாம் துவங்கப்பட்டு (இரண்டு நாட்கள்) 16/08/2025 தேதி வரை நடைபெறும்.
மாநில நடுவர் பயிற்சி முகாமிற்கு கலந்து கொள்ள உள்ள நபர்கள் கீழ்கண்ட லிங்கினை பயன்படுத்தி தகவலை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
Link: https://forms.gle/9cVf9EQXVXMxBERo7
நன்றி,


